search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகள்
    X
    யானைகள்

    வால்பாறை அருகே காட்டுயானைகள் அட்டகாசம்

    வால்பாறை அருகே வீடு, பள்ளியை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
    வால்பாறை:

    வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. மேலும் அடர்ந்த வனப்பகுதிகளும் காணப்படுகிறது. இது தவிர பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. வனப்பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் சில நேரங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. மேலும் குடியிருப்புகள் மற்றும் பயிர்கள் சேதம் அடைகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், தொடர்ந்து பாதிப்புகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வால்பாறை அருகே ஹைபாரஸ்ட் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் 5 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்தன. பின்னர் அருகில் உள்ள தனியார் எஸ்டேட் மேலாளர் டொமினிக் பொன்னப்பா என்பவரது வீட்டின் சமையல் அறையை உடைத்து, பொருட்களை சேதப்படுத்தின. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டொமினிக் பொன்னப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் தீப்பந்தம் காட்டி காட்டுயானைகளை விரட்டினர்.
    Next Story
    ×