search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது- கமல்ஹாசன்

    மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். 

    மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு நன்றி என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 



    இதுதொடர்பாக, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×