search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய கல்விக் கொள்கை"

    • குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம்.
    • வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன்.

    காந்திநகர்:

    குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று காந்தி நகரில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    மாணவர்களுக்கு முன்பு புத்தக அறிவை கொடுத்து வந்தோம். புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்பட்டதும் அந்த நிலை மாறும். குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்கவேண்டியது அவசியம். புதிய கல்விக்கொள்கையில் அதற்கான அம்சங்கள் இருக்கிறது.

    என் வாழ்நாளில் நான் ஆசிரியராக இருந்ததில்லை, ஆனால் வாழ்நாள் முழுவதும் சமூக சூழ்நிலைகளை நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன். உலக தலைவர்களை நான் சந்திக்கும்போது அவர்களில் சிலர், அவர்களின் ஆசிரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்ச்சி பெற முடியாத மாணவனுக்கு இரண்டு மாதங்களுக்குள் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.
    • தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33% மதிப்பெண்கள் பெற வேண்டும்.

    டெல்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

    புதிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள தீவிரத்தன்மையை தொடக்க வகுப்புகளிலும் கொண்டு வருவதை தங்களது அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

    கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆய்வு குழு ஒன்றை டெல்லி அரசு அமைத்துள்ளது.

    அதன்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற முடியா விட்டால், மறுதேர்வு மூலம் இரண்டு மாதங்களுக்குள் அந்த மாணவனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் புதிய மதிப்பீட்டு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவர் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×