search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    புதிய கல்விக்கொள்கையில் பன்முகத்தன்மை சீர்குலைப்பு- வைகோ

    புதிய கல்விக்கொள்கையில் பன்முகத்தன்மை, கூட்டாட்சி கோட்பாடு சீர்குலைக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.
    சென்னை:

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் பன்முகத்தன்மை, கூட்டாட்சி கோட்பாடு சீர்குலைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே கல்வி முறை என்பதை செயல்படுத்தவே புதிய கல்விக்கொள்கை வரையறுக்கப்பட்டிருக்கிறது.
                                                                                                                                                                                                                     
    கல்வித்துறை பொதுப்பட்டியலின் கீழ் இருப்பதால் மாநில அதிகாரங்கள் மத்திய அரசிடம் சென்றுவிடும். பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

    மத்திய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×