search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாற்றங்கரையோரம் நிலத்தை சமன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை காணலாம்
    X
    முல்லைப்பெரியாற்றங்கரையோரம் நிலத்தை சமன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை காணலாம்

    முல்லைப்பெரியாற்றங்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

    கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றங்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கம்பம்:

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக வந்து ராட்சத குழாய்கள் மூலம் லோயர்கேம்ப்பை வந்தடைகிறது. பின்னர் அங்கு இருந்து ஆற்றின் வழியாக தண்ணீரானது வைகை அணைக்கு செல்கிறது. இந்த ஆற்றில் நீர் வரத்து இல்லாத காலங்களில் தனிநபர்கள் ஆற்றின் கரையை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனிடையே ஆக்கிரமிப்பை பொதுப்பணித்துறையினர் அகற்றாததால் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.

    கம்பம் அடுத்த குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய சிறு புனல் மின்சார உற்பத்தி நிலைய தடுப்பணை அருகே முல்லைப்பெரியாற்றங்கரையோரம் உள்ள நிலத்தை சமன்படுத்தி தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பால் மழை வெள்ள காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாமல் சிறுபுனல் மின்சார உற்பத்தி நிலைய தடுப்பணைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×