search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு தேர்வுத்துறை இணையதளம்
    X
    அரசு தேர்வுத்துறை இணையதளம்

    அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் வருகைப்பதிவு விவரம்

    வருகிற 30-ந்தேதி முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் வருகைப்பதிவேடு விவரங்களை பதிவேற்றம் செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    அரசு தேர்வுகள் இயக்குனர் (முழு கூடுதல் பொறுப்பு) மு.பழனிச்சாமி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    www.dge.tn.gov.in
    என்ற அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுடைய முகப்பு தாளை 29-ந்தேதி (நாளை) பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாணவர்களுடைய வருகைப்பதிவேட்டை சரிபார்த்து பள்ளிநாட்கள் எத்தனை? மாணவர்கள் வருகை தந்த நாட்கள் எத்தனை? என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.

    அதன்பின்னர், வருகிற 30-ந்தேதி முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் வருகைப்பதிவேடு விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதம் மதிப்பெண்ணும், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும் என மொத்தம் 100 சதவீதத்துக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

    இந்த பணிகள் யாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் என்பதால் எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் கவனமாக செயல்படவேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×