search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாநகராட்சியில் முழு பொதுமுடக்கம்
    X
    மதுரை மாநகராட்சியில் முழு பொதுமுடக்கம்

    மதுரையில் நாளை முதல் முழு பொதுமுடக்கம்: எந்தெந்த இடங்கள் குறித்து முழு விவரம்....

    கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளைமுதல் 30--ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது..

    இந்நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளைமுதல் 30-ம்தேதி வரை சில தளர்வுகளுடன் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    முழு பொதுமுடக்கம் மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப்பகுதிகள், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதியில் அமல்படுத்தப்படும்.

    காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும்.

    ஆட்டோ, டாக்சி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அவரச மருத்துவ சேவைக்கு மட்டுமே அனுமதி.

    அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.  தேனீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

    உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் வழங்க மட்டுமே அனுதி

    போனில் உணவுகளை ஆர்டர் செய்து டொர் டெலிவரி செய்வதற்கும் அனுமி.

    வரும் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை எவ்வித தளர்வுகளும் இன்றி முழு பொது முடக்கம்.

    ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

    மதுரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 705 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×