என் மலர்
செய்திகள்

முதலை
மேலூர் அருகே கிணற்றில் சிக்கிய 8 அடி முதலை
மேலூர் அருகே கிணற்றில் சிக்கிய 8 அடி முதலையை வனத்துறையினர் மீட்டனர். கிணற்றுக்குள் முதலை எப்படி? வந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலூர்:
மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறைபட்டி கிராமத்தில் பெரியாறு ஒரு போக பாசன விவசாய சங்க தலைவர் முருகனுக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை முதலை கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர். இதுகுறித்து வனத்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
வனத்துறை அலுவலர் கம்பக்கொடியான் தலைமையில் வன அலுவலர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் கிடந்த முதலையை மீட்டனர். அந்த முதலை சுமார் 8 அடி நீளம இருந்தது. கிணற்றுக்குள் முதலை எப்படி? வந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலூர் அருகே ஊரணியில் முதலை கிடப்பதாக மக்கள் பரவலாக பேசி கொண்டனர். அந்த முதலை தான் கிணற்றுக்குள் வந்ததா? என விசாரணை நடக்கிறது.
Next Story