என் மலர்

  செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்தி வேலூர் அருகே 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பரமத்தி வேலூர்:

  பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கோபி என்ற வீரமலை (வயது 33). இவர் நேற்று மாலை அதே பகுதியில் ரங்கராஜன் என்பவரது வீட்டின் 2-வது மாடியில் கைப்பிடி சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அருகில் இருந்த அருணாச்சலம் என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் விழுந்துள்ளார்.

  இதில் படுகாயமடைந்த வீரமலையை அருகில் இருந்தவர்கள் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×