search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன்
    X
    திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன்

    திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்

    திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறலோடு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜெ.அன்பழகனுக்கு வென்டிலேட்டர் மூலம் 80% ஆக்சிஜன் செலுத்தப்படுவதாகவும், 24 மணி நேரமாக ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×