search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.பாரதி
    X
    ஆர்.எஸ்.பாரதி

    ஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தது காவல்துறை

    ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை கடந்த 23ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விசாரணைக்குப் பின்னர் அவர்  நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ்.பாரதி பேசியது பற்றிய வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

    சென்னை ஐகோர்ட்

    இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் இன்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி நிர்மல் குமார் இன்று விசாரணை நடத்த உள்ளார்.

    மேலும், சரண் அடையும் நாளிலேயே தனது ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
    Next Story
    ×