search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழுகை
    X
    தொழுகை

    ரம்ஜான் கொண்டாட்டம்- கோவையில் முஸ்லிம்கள் வீடுகளில் தொழுகை

    கோவையில் இஸ்லாமியர்கள் வீட்டிலேயே சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து தொழுகை நடத்தி புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.
    கோவை:

    புனித ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் ஒன்று கூடி மசூதிகளில் தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கால் மசூதிகள் திறக்கப்படவில்லை. தனி மனித இடைவெளி மிக அவசியம் என்பதால் இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தே தொழுகை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    கோவை கரும்புக்கடை, ஜி.எம். நகர், செல்வபுரம் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் வீட்டிலேயே சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து தொழுகை நடத்தி புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். இதே போன்று உக்கடம், கோட்டை மேடு, ஆத்துப்பாலம், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் புனித ரமலானை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    Next Story
    ×