search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.பாரதி
    X
    ஆர்.எஸ்.பாரதி

    ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்- நீதிபதி உத்தரவு

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் வீட்டிற்கு அழைத்துச் சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

    அப்போது, தனக்கு சளி மற்றும் இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி கேட்டுக்கொண்டார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது என ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, ஆர்.எஸ்.பாரதிக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி  உத்தரவிட்டார். ஆர்.எஸ்.பாரதி பேசியது பற்றிய வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
    Next Story
    ×