search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மதுபானம் வாங்க 7 வண்ணங்களில் டோக்கன்- கடைகளை திறக்க டாஸ்மாக் தீவிரம்

    டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள், கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பித்தது.

    இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்நிலையில் டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடைகளை மூடும்படி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது.

    இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே மதுபானம் வாங்க மதுக்கடைக்கு வர முடியும் குறிப்பிட்ட வண்ணம் உள்ள டோக்கனை குறிப்பிட்ட நாளில் கொண்டு வந்து டாஸ்மாக்கில் மது வாங்கலாம்.

    மேலும் சென்னை தவிர தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.
    Next Story
    ×