search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
    X
    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    முதல்வரின் தொலைநோக்கு நடவடிக்கைகளுக்கு தோள் கொடுத்து துணை நிற்போம்- ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

    கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முதல்வர் பழனிசாமி எடுத்துவந்த தொலைநோக்கு நடவடிக்கைகளுக்கு தோள் கொடுத்து துணை நிற்போம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

    மதுரை:

    தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.

    ஏழை, எளிய மக்கள், நலிவுற்ற தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் ஊரடங்கின் போது அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகிறார்.

    மதுரை உலக தமிழ்ச்சங்க அரங்கில் நலிந்த நடன கலை ஞர்களின் குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கபசுர குடிநீர் தயாரிக்க பயன்படும் மூலிகைப்பொடிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் வினய், மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் கோவியட்-19 தொற்று நோயிலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்திட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வரும் தமிழக மக்களுக்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    பொதுவாக கிராமப்புறங்களில் நோய் தொற்று கட்டுப்பாட்டில் வந்துள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் நகர்ப்புறங்களில், குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்த நோய் தொற்று தொடர்ந்து பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதை நம்மால் உணர முடிகிறது.

    நம்முடைய முதல்- அமைச்சர் நாட்டிற்கு நல்வழி காட்டுகின்ற வகையில் முன்னுதாரணமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக எடுத்ததன் மூலம் உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுகின்ற பாதுகாப்பு அரணை உரிய காலத்தில் அமைத்து கொடுத்து நாட்டிற்கே முன்னுதாரணமாக செயல் படுபவர் நம்முடைய முதல்-அமைச்சர் என்று அனைவராலும் பாரட்டப்படுவதை நாம் பார்க்கிறோம்.

    மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் அரசுக்கு கூறி வருகின்ற அறிவுரைகளையும், முக்கிய மானதாக நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் ஊர டங்கை மேலும் கடுமை யாக்கினால் மட்டுமே இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.

    மக்கள் நலனே தன் நலன் என்று ஓய்வின்றி களத்திலே நிதானத்தோடும், ஒவ்வொரு பிரச்சினைகளையும் முழு மையாக ஆய்வு செய்து தன்னுடைய நீண்ட நெடிய அனுபவத்தை துணை கொண்டு, மதி நுட்பத்தோடும், தீர்க்கதரிசனமாக ஓவ்வொரு முடிவுகளையும் மக்களை காக்கின்ற மகத்தான நடவடிக்கையாக எடுத்து வருவதோடு, தற்போது உள்ள சூழ்நிலைகளை மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு எடுத்துள்ளது.

    அதே வேளையில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிக்கு விலக்கு அளித்தும் நம்முடைய முதல்-அமைச்சர் முத்தான அறிவிப்பு கொடுத்துள்ளார்.

    கொரோனா கோவியட்-19 நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக தீவிரமாக பரவும் கடும் நோய் என்பதால் இதை கட்டுப்படுத்த முதல் - அமைச்சர் சிந்தித்து செயல்படுத்தி வருகின்ற தொலைநோக்கு நடவடிக்கைகளுக்கு நாம் முழு ஆதரவையும், ஒத்து ழைப்பையும் வழங்குவோம்.

    கோவியட்-19 நோய் தொற்றிலிருந்து மனித குலத்தை காப்போம். சுய தனிமை மேற்கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், நம்மை நாமே காப்பாற்றி கொள்வததோடு, நாட்டு மக்களை காப்பாற்றுகின்ற மகத்தான சேவையாற்றி முதல்-அமைச்சருக்கு தோள் கொடுத்து துணை நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×