search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 

    நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. 

    44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கைத்தட்டியும் விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். 

    இது ஒருபுறமிருக்க, சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 

    அப்போது தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×