search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    கொரோனா தடுப்பு மருந்து: சித்தா-யுனானி மருத்துவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

    தலைமை செயலகத்தில் சித்தா, யுனானி மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் முயற்சிக்கு அரசின் முழு ஒத்துழைப்பு உண்டு என்று உறுதியளித்தார்.
    சென்னை:

    கொரோனா பரவுவது இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் உள்ளது.

    தமிழ்நாட்டில் இதுவரை 18 பேர் பலியாகியும், 1,626 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் கொரோனா வைரசின் தாக்கம் மேலும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினர் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சே‌ஷய்யன் தலைமையில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சி குழுவினர் முதல் கட்ட ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

    இன்னும் அடுத்த கட்ட முயற்சியிலும் வெற்றி பெற்றால் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட முடியும் என்று அறிவித்தனர்.

    இதேபோல் சித்தா, யுனானி, ஆயுர்வேதம் மருத்துவர்களும் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று (புதன்கிழமை) சித்தா, யுனானி, ஆயுர்வேதா மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மருத்துவக் குழுவினர் இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க எடுத்துள்ள முயற்சிகளை விளக்கமாக கூறினர். இதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இன்னும் எவ்வளவு நாட்களில் முழு வெற்றி கிடைக்கும் என்பன போன்ற விவரங்களையும் எடுத்துரைத்தனர்.

    கொரோனா வைரஸ்

    அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் பேசுகையில், உங்கள் முயற்சிக்கு அரசின் முழு ஒத்துழைப்பு உண்டு என்றும் உறுதியளித்தார்.

    இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உயர் அதிகாரிகள், சித்தா, யுனானி, ஆயுர்வேதா மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.

    Next Story
    ×