search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மா உணவகம்
    X
    அம்மா உணவகம்

    சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும்- மாநகராட்சி

    சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது
    சென்னை:

    தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மாநகரில் 407 உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 உணவகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும் விற்கப்படுகிறது. இதைபோல் மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் இந்த உணவு வகைகள் ஊரடங்கு நேரத்தில் பணத்தட்டுப்பாட்டால் சிரமப்படும் சாதாரண மக்களுக்கு கைகொடுத்து வருகிறது.

    இதனால் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.

    இதனை கண்டித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை உணவு இலவசமாக வழங்கப்படும்.

    கொரோனா எதிரொலியாக வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உதவும் வகையில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் இடம், பெயர், தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு இலவச உணவு தர உத்தரவிடப்பட்டுள்ளது.

    இலவச உணவு தர பல நன்கொடையாளர்கள் நிதி அளித்ததை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×