search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா உணவகம்"

    • நான் தூத்துக்குடிக்கு சென்ற பொழுது தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 10 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
    • ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசு.

    காவேரிப்பட்டிணம்:

    முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியின் தந்தை மறைவையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

    வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்துக்கு முன்பாகவே சென்னையில் அதிக கனக மழை பெய்யும் என வலியுறுத்தியது. தற்போதுள்ள அரசுக்கு அந்த செய்தி தெரிந்தும் பொருட்படுத்தவில்லை.

    சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் சென்னையில் உள்ள பொதுமக்கள் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.

    அ.தி.மு.க. அரசின்போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே நடவடிக்கை எடுத்திருக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள அரசு எந்தவித முன்னெச்சரிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் 1300 மின்மோட்டார்கள் அ.தி.மு.க. அரசில் வைத்திருந்தோம். தாழ்வான இடங்களில் கனரக ராட்சத மின் மோட்டார் வைத்து உடனடியாக மழை நீரை அகற்றினோம். ஒவ்வொரு வார்டுகளிலும் அம்மா உணவகத்தில் தரமான உணவை மக்களுக்கு வழங்கினோம். தற்போது அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவகத்தை மூடிவிட்டனர்.

    இதேபோன்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசுக்கு தெரியும்.

    நான் தூத்துக்குடிக்கு சென்ற பொழுது தூத்துக்குடியில் கிட்டத்தட்ட 10 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

    இங்குள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை பால், தண்ணீர், உணவு ஆகிவற்றை இந்த அரசு எதுவும் அந்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை.

    தூத்துக்குடி நான் சென்ற பொழுது அங்கு எந்த அமைச்சரும் வரவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். இந்த அரசு செயலாற்ற அரசாக காட்சியளிக்கிறது.

    இந்தியா கூட்டணி குழப்பத்தில் உள்ளது. அடுத்த கூட்டம் நடக்குமா? இல்லையா? என தெரியவில்லை. அக்கூட்டணியில் ஒருவர் தற்போது இந்தியில் பேச வேண்டும் என கூறுகிறார். வெவ்வேறு கருத்துக்களுடைய கட்சிகள் கூட்டணி அமைப்பது நீடிக்குமா என தெரியவில்லை.

    தற்போது 2 அமைச்சர்கள் சிறைக்கு செல்கின்றனர். ஆனால் இன்னும் எத்தனை பேர் சிறைக்கு செல்வார்கள் என பொறுத்திருந்து பாருங்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தி.மு.க. அரசு.

    இவர்கள் சாதனை செய்தது ஊழல் தான். அனைத்து இடங்களிலும் கமிஷன், கரப்சன், இதுதான் அவர்களின் தாரக மந்திரம். அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியாக செயல்பட்டது. கடந்த 2½ ஆண்டு காலமாக தமிழகத்தை படுபாதாள இடத்தில் இந்த அரசு தள்ளிவிட்டுள்ளது. இந்த அரசு எதற்கெடுத்தாலும் குழு போட்டு செயல்படுகிறது. ஆகவே இந்த அரசு குழு அரசாங்கமாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
    • மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஒருநாள் மழைக்கேசென்னை தத்தளிக்கும் சூழலை பார்த்தோம். மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முறையாக வடிகால் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    * கார் பந்தயத்திற்காக 42 கோடி ரூபாய் அரசு செலவு செய்வது கண்டித்தக்கது. சென்னை தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தயம் நடத்த இடம் இருக்கும் போது சென்னையில் நடத்துவதா?

    * மழை பாதிப்புகளுக்கு இடையே சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ஏன்? சென்னையில் கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு லாபம்?

    * கார் பந்தயம் நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.

    * அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது

    * மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    * கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது.

    * தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது?

    * சபாநாயகர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சபை தலைவர் பொதுவாக பேசாமல் கட்சி தலைவர் போல் பேசுகிறார்.

    * பாராளுமன்ற தேர்தலுக்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது
    • இருவரும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

    குளச்சல் :

    குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையம் உள்ளே கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வெளியூர் பயணி கள் மற்றும் ஏழை, எளிய பொதுமக்கள் உணவருந்தி வருகின்றனர். இன்று காமராஜர் சாலையை சேர்ந்த சேவியர் (வயது 57) தனதுமனைவி மல்லிகா (52)வுடன் அம்மா உணவகத்தில் டிபன் சாப்பிட்டு கொண்டி ருந்தார்.

    அப்போது உணவகத்தின் மேற்கூரையின் பால் சீலிங் திடீரென உடைந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் படுகாய மடைந்தனர்.

    உடனே அப்பகுதியினர் அவர்களை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தகவலறிந்த நகராட்சி ஆணையர் செந்தில்குமார் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டார்.உடைந்து விழுந்த கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.
    • அம்மா உணவகம் அருகே கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி யில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மேயர் சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து குறைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார். துணை கமிஷனர் தாணு மூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா அறிவுறுத்தலின் பேரில் பகுதி செயலாளர் காந்தி வெங்கடாஜலம், சிந்து முருகன் ஆகியோர் தலைமையில் முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க ஆட்சிக்காலத்தின் போது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக குறைந்த செலவில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை ஏழைகளுக்கு கிடைக்க வழிவகை செய்யும் விதமாக அம்மா உணவகங்களை ஏற்படுத்தித் தந்தார்.

    தற்போது தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த உணவகங்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. தரமற்ற உணவுகள் வழங்குகின்றனர். பாளை மண்டலத்துக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தின் அருகே மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வந்து செல்பவர்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே மனித கழிவுகள், மது பாட்டில்கள் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். உடனடியாக இந்த கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், நெல்லை பகுதி துணைச் செயலாளர் மாரிசன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், நிர்வாகிகள் பாளை ரமேஷ், பாறையடி மணி, சம்சுல்தான், பக்கீர் மைதீன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மாலையில் 2 சப்பாத்தி ரூ.3-க்கு விற்கப்படுகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு வசதியாக இருந்தது.
    • உணவகங்களை நடத்துவதால் ஆண்டுக்கு ரூ.120 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன. காலை உணவாக இட்லி ஒரு ரூபாய். பொங்கல் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதியம் சாம்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை சாதம் ரூ.5-க்கும், தயிர்சாதம் ரூ.3-க்கும் விற்கப்படுகிறது.

    மாலையில் 2 சப்பாத்தி ரூ.3-க்கு விற்கப்படுகிறது. இது ஏழை எளிய மக்களுக்கு வசதியாக இருந்தது.

    அதே நேரம் ஒரே விதமான உணவே தினமும் வழங்கப்படுவதால் மக்களிடையே வரவேற்பும் குறைந்துள்ளது. ஆனாலும் அம்மா உணவகங்களை நம்பி இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கிடையில் மாலை நேரம் எப்போது சென்றாலும் சப்பாத்தி இல்லை என்கிறார்கள். இதற்கு காரணம் சாலையோர கடைகளில் ஒரு சப்பாத்தி ரூ.3 என்ற அடிப்படையில் மொத்தமாக விற்றுவிடுவதாக கூறப்படுகிறது.

    இந்த மாதிரி புகார்கள் தொடர்ந்து வந்ததால் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் இருந்து மாவு வழங்கப்படவில்லை.

    இன்னும் ஒரு மாதம் வரை சப்பாத்தி மாவு வழங்கப்பட மாட்டாது என்கிறார்கள் அதிகாரிகள்.

    இந்த உணவகங்களை நடத்துவதால் ஆண்டுக்கு ரூ.120 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    ஆனால் இதை முறையாக மேம்படுத்தி குறைந்த விலையில் உணவு கிடைத்தால் பல்லாயிரக் கணக்கானோருக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள்.

    • சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
    • முதலமைச்சர் காலை உணவு திட்டம் முறையாக திட்டமிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. திருக்குவளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் காலை உணவு திட்டம் முறையாக திட்டமிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

    ஆனால் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்கள் நல்ல திட்டமாக இருந்தாலும் முறையான திட்டமிடல் எதுவும் இல்லை. அதற்காக தனியாக துறை இல்லை. நிதி இல்லை. வாகன வசதி இல்லை.

    செயற்பொறியாளர் ஒருவர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருப்பார். அவரிடம் சாலை பிரச்சினைகள் பற்றிதான் வயர்லெசில் பேசுவார்கள். ஆனால் அப்போது கொருக்குபேட்டையில் சாம்பார் தீர்ந்து விட்டது அனுப்பி வையுங்கள். தண்டையார்பேட்டையில் இட்லி காலியாகிவிட்டது. சவுகார்பேட்டையில் இருந்து நூறு இட்லி அனுப்புங்கள்.

    சவுகார்பேட்டையில் இருந்து 100 இட்லி அனுப்புங்கள் என்று தான் வயர்லெசில் பேசிக் கொண்டிருந்தார்கள். அதிகாரிகளால் வேறு வேலையே பார்க்க முடியவில்லை.

    ஆனால் காலை உணவு திட்டம் அப்படி அல்ல. அதற்கான பயனாளிகள் கணக்கிடப்பட்டு ரூ.404 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எத்தனை மையங்களில் சமைப்பது? எவ்வளவு ஹாட் பாக்ஸ்களில் கொண்டு செல்வது? தேவைப்படும் வாகனங்கள் எத்தனை? என்று எல்லாமே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.

    இந்த மாந்தோப்பு பள்ளியில் 1073 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு தட்டு மற்றும் தம்ளர்களை மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார்.

    இதே போல் சென்னை முழுவதும் வாங்கி கொடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் காலை உணவு விரிவாக்கத்தை திருவொற்றியூர் மண்டலம் 6-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் எம்.சாமுவேல் திரவியம், கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    திருவொற்றியூர் தேரடியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தொடங்கி வைத்தார்.

    • 10 ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300 ரூபாய் வரை தங்கள் சொந்த பணத்தை போட்டுள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வசூலாகும் தொகையை மகளிர் சுய உதவிக்குழுவினர் மக்கள் சேவை மையத்தில் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்றும் அம்மா உணவகத்தில் வசூலான பணத்தை மகளிர் சுய உதவிக்குழுவினர் மக்கள் சேவை மையத்தில் செலுத்த சென்றுள்ளனர். அப்போது பணத்தை என்னும் மெஷினில் பரிசோதிக்கும் போது 10 ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தங்கள் கை காசுகளை போட்டு சமாளித்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கள்ள நோட்டு வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300 ரூபாய் வரை தங்கள் சொந்த பணத்தை போட்டுள்ளனர்.

    அதிசயமும் அதே சமயம் தங்களிடம் சிக்கிய 10 ரூபாய் கள்ள நோட்டை வாடிக்கையாளர்கள் கண்ணும் படும்படி இதன் பெயர் கள்ள நோட்டு என நூல் கட்டி தொங்க விட்டுள்ளனர்.

    இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறும்போது, தினமும் அம்மா உணவகத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே கள்ள நோட்டுப் புழக்கம் இருந்து வருகிறது. பொதுமக்கள் யார் மீதும் சந்தேகப்பட முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வு பணம் எண்ணும் எந்திரம் இருந்தால் கள்ள நோட்டை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இதுவரை 14 அம்மா உணவகங்கள் மூடப்பட்டதால் 393 அம்மா உணவகங்கள்தான் இப்போது செயல்பட்டு வருகிறது.
    • தி.நகரில் வார்டு 117-ல் தியாகராய ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தை இடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    ஏழை-எளிய மக்கள் பசியால் வாடிவிடக் கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம்.

    காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக்குறைந்த விலையில் இங்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விரிவுபடுத்தப்பட்டது.

    சென்னையில் மட்டும் வார்டுக்கு இரண்டு என மொத்தம் 407 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது. பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த அம்மா உணவகங்கள் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு லாப-நஷ்டம் பார்க்கப்படுவதால் இப்போது நஷ்டம் ஏற்படும் அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் சென்னையில் இதுவரை 14 அம்மா உணவகங்கள் மூடப்பட்டதால் 393 அம்மா உணவகங்கள்தான் இப்போது செயல்பட்டு வருகிறது.

    தி.நகரில் வார்டு 117-ல் தியாகராய ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தை இடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    அவ்வாறு இடிக்கப்படும் பட்சத்தில் அருகில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் அம்மா உணவகம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏழை-எளிய மக்கள் பயனடைந்து வந்த அம்மா உணவகங்கள் திறம்பட நடத்த முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதை அரசு சரி செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • அம்மா உணவகத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • பழுதடைந்த அம்மா உணவக கட்டிடங்களை சரி பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 393 அம்மா உணவகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவை 10 ஆண்டுக்கு மேலாக இயங்கி வருவதால் அங்குள்ள பொருட்கள் பழுதடைந்தும் உடைந்தும் உள்ளன. கிரைண்டர், மிக்சி, பாத்திரங்கள் உள்ளிட்டவை பழுதாகி அதனை சரி செய்து இயக்கி வருகின்றனர்.

    தினமும் 3 வேளையும் உணவு தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. இதனால் அங்குள்ள ஊழியர்கள் சிரமப்படுகிறார்கள்.

    ஒவ்வொரு நாளும் உணவு தயாரிப்பதில் தாமதமும் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்து அம்மா உணவகத்தை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பொருட்கள் எவை எவை தொடர்ந்து பயன்படுத்தலாம், அவற்றில் சரி செய்யக்கூடியது எது, பயன்படுத்த தகுதியற்ற பொருட்கள் எவை என கண்டறிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

    மண்டல தலைவர், சுகாதார அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் சென்று பொருட்களை ஆய்வு செய்து ஓட்டை உடைசலானதை ஏலத்திற்கு விடவும் அதற்கு பதில் புதிய பொருட்கள் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பழுது பார்த்து பயன்படுத்தக் கூடியவற்றை சரி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி 2 வாரத்தில் முடிக்கப்பட்டு புதிய பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இதே போல பழுதடைந்த அம்மா உணவக கட்டிடங்களை சரி பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தந்த கட்டிடங்களில் கூரை ஒழுகுகிறது, பொதுமக்கள் சாப்பிட முடியாமல் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு செய்து அற்றை சரி பார்க்கும் நடவடிக்கையும் மாநகராட்சி மண்டல அலுவலர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

    • தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
    • அம்மா உணவகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மடை மாற்றி விடப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களை அரவணைத்துப் பேணிக் காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, தமிழ்நாட்டின் தேவைகளை அறிந்து, தமிழக மக்களின் நாடித் துடிப்பினை உணர்ந்து, அதற்கேற்ப பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள், விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்களை, குறிப்பாக ஏழை மக்களை, உழைக்கும் மக்களை, தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர் வர்க்கத்தினரை காப்பதற்காக, மலிவு விலையில் தரமான உணவினை வழங்கும் வண்ணம் நகர்ப்புறங்களில், குறிப்பாக சென்னை மாநகரத்தில் அம்மா உணவகங்களை உருவாக்கினார்கள். சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அம்மா உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவது, வசதிகளை ஏற்படுத்தித் தராதது போன்ற பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. அம்மா உணவகங்களின் செயல்பாட்டினை நீர்த்துப் போகச் செய்த பெருமை தி.மு.க.வையேச் சாரும். அம்மா உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு தரமானதாகவும், சுவையானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லை என்பதோடு, குறைந்த அளவு உணவே தயார் செய்யப்படுகிற நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, உணவருந்த வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. பல இடங்களில் பல உணவுப் பொருட்கள் இல்லை என்ற நிலை நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகிறது.

    உதாரணமாக, சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் குடிநீர்த் தொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து இருப்பதாகவும், உணவகத்திற்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

    இதேபோன்று, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்து பயனற்று இருப்பதாகவும், மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகள் இயங்காததன் காரணமாக இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து கிடப்பதாகவும், நாய்களின் உறைவிடமாக காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.

    திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் உள்ள அம்மா உணவகம் கழிவுநீர் மையமாக காட்சி அளிப்பதாகவும், மோட்டார் பழுதடைந்து இருப்பதாகவும், கஸ்தூரிபாய் மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்திலும் இதே நிலை இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

    இந்தப் பகுதிகள் அனைத்துமே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்டவை. இந்த நிலைமைதான் அனைத்து அம்மா உணவகங்களிலும் நிலவுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அம்மா உணவகங்கள் கேட்பாரற்று, கவனிப்பாரற்று அனாதையாக காட்சி அளிக்கின்றன.

    சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் அம்மா உணவகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பத்திரிகையில் செய்திகள் வந்தன. ஆனால், தற்போதைய அம்மா உணவகங்களைப் பார்க்கும்போது, அம்மா உணவகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி மடை மாற்றி விடப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் மக்களிடையே எழுந்துள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், 2021 ஆம் ஆண்டிற்கு முன்பே இதுபோன்ற நிலைமை நிலவுவதாகவும், இதுகுறித்து அறிக்கை பெறப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இதுபோன்ற பதிலை அதிகாரிகள் தெரிவிப்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் ஒரு திறமையற்ற ஆட்சி நடக்கிறது என்பது தெளிவாகிறது.

    ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அம்மா உணவகங்களில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றை போக்கி அவை நன்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர்.
    • சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு அகில் மேடை வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த 11 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 சுய உதவி குழுவை சேர்ந்த பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த ஊழியர்கள் டோக்கன் வழங்குதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுதல் என தங்களுக்குள் வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் இந்த அம்மா உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தபட்டனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் டோக்கன் மட்டுமே வழங்கி வந்துள்ளனர். மற்ற வேலைகளை செய்யவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மற்ற ஊழியர்கள் அவர்களிடம் நீங்களும் இங்கு மற்றவர்கள் போல அனைத்து வேலைகளை செய்ய வேண்டும். டோக்கன் போடும் வேலை மட்டும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.

    ஆனால் அந்த 2 ஊழியர்கள் வழக்கம் போல் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை மற்ற 10 ஊழியர்கள் உணவை பரிமாறாமல் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலை உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த 2 ஊழியர்களும் மற்றவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறினர்.

    அதற்கு அதிகாரிகள் முதலில் பொதுமக்களுக்கு உணவை பரிமாறுங்கள். பின்னர் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றனர்.

    இதனை ஏற்று அம்மா உணவக ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு காலை உணவு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது. 

    • உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
    • மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு, 

    ஈரோடு அரசு மருத்துவமனை பின்புறம் அம்மா உணவகம் கடந்த 7 ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சி சார்பில் இயங்கி வந்தது. இங்கு அரசு மருத்துவமனை நோயாளிகள், அவரது உறவினர்கள், கூலித்தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தனர்.

    குறைந்த விலையில் நிறைவான சாப்பாடு கிடைப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை பின்புற பகுதியில் பல கோடி மதிப்பில் பல்துறை மருத்துவமனை மைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில் இந்த பணிக்காக இடம் தேவைப்பட்டதால் அம்மா உணவக கட்டிடத்தை இடிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக மாநகராட்சி இடம் முறையாக அனுமதி பெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மா உணவக கட்டிடம் இடிக்கப்பட்டது.

    இதனையடுத்து தற்போது தற்காலிகமாக அரசு மருத்துவமனை மன நோயாளிகள் பிரிவில் மருந்து வழங்கும் இடத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உணவு பரிமாறப்பட்டு வருகிறது.

    இந்த இடத்தையும் விரைவில் காலி செய்யுமாறு மருத்துமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து அம்மா உணவகத்திற்கு வேறு இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    ×