என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 83 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இது டாக்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.
  கோவை:

  கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

  கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் 134 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 54 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். 

  இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டத்தை சேர்ந்த 29 பேர், திருப்பூரை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 32 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். கோவை மாவட்டத்தில் இதுவரை 83 பேர் குண மடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
  இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவது மாவட்ட நிர்வாகத்துக்கும், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மீதமுள்ளவர்களும் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதற்கிடையே நேற்று ஒரே நாளில் 35 பேர் கொரோனா அறிகுறிகளுடன் இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆண்கள், 24 பெண்கள் அடங்குவர். இவர்கள் அனைவரது ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  Next Story
  ×