என் மலர்

  செய்திகள்

  கொடைக்கானல் நட்சத்திர ஏரி
  X
  கொடைக்கானல் நட்சத்திர ஏரி

  கொடைக்கானலில் மிதமான மழை- நட்சத்திர ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானலில் பெய்த மிதமான கோடை மழை காரணமாக நட்சத்திர ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
  கொடைக்கானல்:

  மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் கோடைமழை பெய்து சீசன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கோடை மழை பெய்து சீசன் தொடங்கியது. தற்போது பகல் நேரங்களில் மேக மூட்டங்கள் சூழ்ந்து இதமான சூழ்நிலை நிலவுகிறது.

  இதனிடையே நேற்று காலை முதல் லேசான வெயில் அடித்தது.

  பின்னர் மாலை 5.45 மணிக்கு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  கோடை மழை காரணமாக நட்சத்திர ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த மிகவும் ஏற்றாற்போல் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
  Next Story
  ×