என் மலர்

  செய்திகள்

  யானைகள்
  X
  யானைகள்

  கொடைக்கானல் அருகே தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானல் அருகே தோட்டங்களில் 12 காட்டுயானைகள் முகாமிட்டு விவசாய பயிர்களையும் சேதம் செய்து வருகின்றன.
  கொடைக்கானல்:

  கொடைக்கானல் அருகே உள்ள புலியூர், அஞ்சுவீடு, அஞ்சுரான்மந்தை, பாரதிபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் 12 காட்டுயானைகள் கடந்த 4 நாட்களுக்கு மேலாக தனியார் தோட்டங்களில் முகாமிட்டு விவசாய பயிர்களையும் சேதம் செய்து வருகின்றன.

  இந்தநிலையில் நேற்று பகலில் புலியூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் வாழை, பலா மரங்களை சேதப்படுத்தின. பின்னர் அவை தேவராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோருக்கு சொந்தமான தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.

  இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் அச்சம் அடைந்துள்ளனர். எனவே காட்டுயானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×