search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    முகக்கவசம், வென்டிலேட்டர் வாங்க ரூ.3 ஆயிரம் கோடி தேவை - பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

    கொரோனா முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. 

    இதற்கிடையே, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், என்-95 முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவை வாங்க ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார்.

    மேலும், தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனை உபகரணங்களை கூடுதலாக வழங்க வேண்டும்.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனே மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

    இதேபோல், தமிழகம் கோரிய ரூ.9 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும்.  2019-20ம் ஆண்டு டிசம்பர்-ஜனவரிக்கான ஜி.எஸ்.டி. நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.  2020-21ம் ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை முன்கூட்டியே வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×