search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு உருவாக்கியுள்ள இணையதளம்
    X
    தமிழக அரசு உருவாக்கியுள்ள இணையதளம்

    கொரோனா குறித்து அறிய புதிய இணையதளம்

    கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணைய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
    சென்னை:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 29 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணைய தளம் ஒன்றை உருவாகியுள்ளது.  www.stopcoronatn.in  என்ற இணையதளத்தில் கொரோனா குறித்த தகவலும் மற்றும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். 
    Next Story
    ×