search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    கொரோனா பரவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள்- அமைச்சர் வேண்டுகோள்

    கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா நோயால், வயதானவர்களுக்கு இறப்பு நேரிடுவதால், உலகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். மக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

    உலக நாடுகளை கொரோனா உலுக்கி கொண்டிருந்தால், அதன் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்து, மக்கள் அரசுக்கு மிகப்பெரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எதிர்மறையான கருத்துக்களுக்கு இடமளிக்காமல், ஒருமித்த கருத்துகளுடன் செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 
    Next Story
    ×