search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவிகள்.
    X
    பள்ளி மாணவிகள்.

    பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்- தமிழக அரசு அறிவிப்பு

    பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன.  ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.  தமிழக சட்டசபையில் தமிமுன் அன்சாரி சார்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கூறினார். ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15ந்தேதி தொடங்கி நடைபெறும் எனவும் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும் கூறினார்.

    தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

    10ம் வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட கூடும் என கூறப்பட்டு வந்தது.  எனினும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்விதுறை இன்று விளக்கம் அளித்து உள்ளது.
    Next Story
    ×