search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக பள்ளிக்கல்வித்துறை"

    தமிழகத்தில் 760 நர்சரி பள்ளிகள் இதுவரையில் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பதால் அதனை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளிகள் தொடக்க கல்வி இயக்குனரகத்தில் அங்கீகாரம் பெற வேண்டும். மெட்ரிக்குலேசன் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மெட்ரிக் இயக்குனரிடம் அங்கீகாரம் பெற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளிகளை ஆய்வு செய்து அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் 760 நர்சரி பள்ளிகள் முறையான அனுமதி பெறாமல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது கல்வி துறை அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது. இதுகுறித்து அந்த தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளாக இருந்தால் 33 சென்ட் நிலமும், நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து பகுதியாக இருந்தால் 1, 2 மற்றும் 3 ஏக்கர் நிலமும் வேண்டும்.

    இது தவிர பள்ளி கட்டிடத் தன்மை, தீ பாதுகாப்பு சான்றிதழ், சுகாதாரத்துறையிடம் இருந்து தடையில்லா சான்று ஆகியவை பெற வேண்டும். சுமார் 2 ஆயிரம் தனியார் பள்ளிகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன.


    இவற்றில் 760 நர்சரி பள்ளிகள் இதுவரையில் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பதால் அதனை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும் இந்த பள்ளிகளுக்கு மேலும் ஒரு கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இந்த வாரத்திற்குள் அங்கீகாரம் பெறவில்லையெனில் இந்த மாத இறுதியில் பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கையை கல்வித்துறை எடுக்க தயாராக உள்ளது.

    தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் தான் 86 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் உள்ளன. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 55 பள்ளிகளும், அனுமதி பெறாமல் செயல்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-

    அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளை மூடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ள 760 நர்சரி பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் உள்ளனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் அரசு பள்ளிகளை நடத்துகிறார்கள்.

    ஆனால் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். 760 நர்சரி பள்ளிகளில் தகுதியான பள்ளிகளுக்கு அரசு அனுமதி உடனே வழங்க வேண்டும். அதிகாரிகள் தாமதம் செய்வதாலும், அலட்சியத்தாலும் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. மெட்ரிக்குலேசன், மேல்நிலைப் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி தர வேண்டும். கட்டிட அனுமதி தொடர்பாக கோர்ட்டின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அரசு இன்னும் தெளிவான முடிவுகளை அறிவிக்கவில்லை. இதனால் அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. அரசின் காலதாமதத்தால் தனியார் பள்ளிகள் பாதிக்கப்படுகின்றன. விரைந்து முடிவு எடுத்து அறிவித்தால் அங்கீகாரம் புதுப்பிக்கும் நடைமுறைகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 19-ந்தேதி வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்துக்கு யாரும் வரத்தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #Plus2 #Plus2Result
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வருகிற 19-ந்தேதி புனித வெள்ளி அன்று வெளியாகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் பட்டியலும் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி அன்று வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் கொல்லப்படும் தினத்தை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் பெரிய வெள்ளி அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது.

    அன்று தேர்வு முடிவு வெளியிடுவதை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. திட்டமிட்டபடி 19-ந்தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுத்துறை ஈடுபட்டு வருகிறது.

    பிளஸ்-2 தேர்வு முடிவு குருந்தகடு (சிடி) ஆகவோ, கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்து பள்ளிகளுக்கும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பத்திரிகை, செய்தி நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

    அந்த முறையை இந்த வருடமும் பின்பற்றி தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. அதேபோல மாணவர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்படுகிறது.



    இதனால் பள்ளிகளோ, மாணவர்களோ தேர்வு முடிவை தெரிந்துகொள்ள கல்வி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை மதிப்பெண், ரேங்க் வாரியாக தெரிவிக்கும் முறை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை கொண்டு வரப்பட்டது.

    இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப் படும். மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.

    பள்ளிகளுக்கும் ஆன்லைன் வழியாக மாணவர்களின் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் பேட்டியோ, அறிவிப்போ வெளியிட இயலாது. பத்திரிகை, டிவி செய்தி நிறுவனங்களுக்கும் இணைய தளம் வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். அதனால் யாரும் நேரில் வரத்தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Plus2 #Plus2Result
    மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. #Rain #HolidayForSchools #HolidayRestrictions
    சென்னை:

    மழைக்காலங்களில், மழையின் தீவிரம் மற்றும் அந்தந்த பகுதிகளின் நிலவரத்திற்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால் சில சமயம் பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் பாடத்திட்டத்தை முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    இந்த நிலையைப் போக்க மழைக்காலங்களில் விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. அதாவது, வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும், ஒட்டுமொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை.  கோவில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க  வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்  பிரதீப் யாதவ் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-



    மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மழை பெய்தால், உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது.  மழையால் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும்.  மழையை பொறுத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விடுமுறை அறிவிக்க வேண்டும்.   

    விடுமுறை விடப்பட்டால் அதை ஈடுசெய்ய சனிக்கிழமை வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விடுமுறை காரணமாக பாடத்திட்டம் எதுவும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.  

    மழை காரணமாக  கல்வி மாவட்ட அளவில், ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம்.

    திருவிழா போன்றவற்றிற்கு  உள்ளூர் விடுமுறை விடும்போது  ஈடுசெய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.  

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Rain #HolidayForSchools #HolidayRestrictions 
    முதல் வகுப்பு மற்றும் 2-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் வீட்டுப் பாடம் அளிக்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.#School #CentralGovernment

    புதுடெல்லி:

    பள்ளி மாணவ- மாணவிகளின் நலன் கருதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் புதிய உத்தரவை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் வீட்டுப் பாடம் அளிக்க கூடாது. இந்த இரண்டு வகுப்புகளிலும் மொழி பாடம், கணித பாடம் தவிர வேறு எந்த பாடங்களையும் பள்ளிகளில் கற்பிக்க கூடாது.

    3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுசூழல் தொடர்பான பாடங்கள், கணிதம் ஆகியவற்றை என்.சி.இ. ஆர்.டி. திட்டத்தின்படியே கற்பிக்க வேண்டும்.


    இந்த வகுப்பு மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக எந்த பாடபுத்தகங்களையோ, வேறு பொருட்களையோ கொண்டு வரும்படி அறி வுறுத்தக்கூடாது. முதல், 2-வது வகுப்பு மாணவர்களின் புத்தகபை ஒன்றரை கிலோ எடையை தாண்டக் கூடாது. 3-வது முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகபை எடை 2 கிலோ முதல் 3 கிலோ வரைதான் இருக்க வேண்டும்.

    6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை 4 கிலோவுக்கு மேலும், 8-ம் வகுப்பு, 9-ம் வகுபபு மாணவ- மாணவிகளுக்கான புத்தக பை எடை 4.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. 10-ம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்க கூடாது. எந்தெந்த வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அந்த மாணவ- மாணவிகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #School #CentralGovernment

    ×