search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைத்தட்டி நன்றி தெரிவித்த காட்சி
    X
    முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைத்தட்டி நன்றி தெரிவித்த காட்சி

    நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கரவொலி எழுப்பிய பொதுமக்கள்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் கைதட்டி பாராட்டியுள்ளனர்.
    சென்னை: 

    கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மருத்துவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினர் போன்றவர்களுக்கு மற்றவர்கள் தொந்தரவு தர வேண்டாம். 22ந்தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். மருத்துவர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிரூபிப்போம் என்று கூறியிருந்தார்.
    கைத்தட்டி நன்றி தெரிவித்த மக்கள்.
    இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் கைதட்டல் எழுப்பினர். கொரோனா இடர்பாடுகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களை தீயணைப்பு வாகனத்தின் சைரனை ஒலிக்க விட்டு தீயணைப்புப் படையினர் கைத்தட்டி பாராட்டினர். 
     கைத்தட்டி நன்றி தெரிவித்த பொதுமக்கள்.
    கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.
    Next Story
    ×