search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பேரணி நடைபெற்ற காட்சி.
    X
    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பேரணி நடைபெற்ற காட்சி.

    முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பேரணி

    முத்துப்பேட்டையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பேரணி நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்த 3 மாதங்களாக தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி நேற்று பேரணி நடைபெற்றது.

    இதற்கு குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன் அலி தலைமை வதித்தார். இதில் பல்வேறு அமைப்பினர்கள், குழந்தைகளுடன் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் உட்பட சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இந்த பேரணியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டு இருந்தன.

    Next Story
    ×