search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    பகுதி நேர கடைகளுக்கு பதில் நகரும் ரேசன் கடைகள்- அமைச்சர் அறிவிப்பு

    தமிழகத்தில் குறைந்த ரேசன் கார்டுகள் உள்ள பகுதிகளில் நகரும் ரேசன் கடைகள் அமைக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்தார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் சவுந்திர பாண்டியன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகையில், “குறிப்பிட்ட அளவு கார்டு இருந்தால் தான் பகுதி நேர ரேசன் கடைகள் அமைக்கப்படுகின்றன” என்றனர்.

    அவர்கள் மேலும் கூறுகையில், “குறைந்த எண்ணிக்கை கொண்ட கிராமங்களில் மக்கள் நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது” என்றனர்.

    இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்து கூறியதாவது:-

    எதிர்க்கட்சி எம்.எல். ஏ.க்கள் மட்டுமல்ல ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் பகுதி நேர ரேசன் கடைகள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    எனவே குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராம மக்களின் நலன் கருதி பகுதி நேர ரேசன் கடைகள் அமைக்க முடியாத பகுதிகளில், நகரும் (மொபைல்) ரேசன் கடைகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

    முதல்-அமைச்சர் ஆலோசனையின் பேரில் மொபைல் ரேசன் கடைகளை அமல்படுத்த ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    Next Story
    ×