search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சிவி சண்முகம்
    X
    அமைச்சர் சிவி சண்முகம்

    7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்- சிவி சண்முகம் பேட்டி

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு ரூ.4½ அரை கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் சி.வி சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அரசு எதிர்பார்க்கின்றது.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    இந்த விவகாரத்தில் நளினியை தவிர்த்து, பிறரை தூக்கிலிடலாம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சியினரெல்லாம், வெறும் வாயால் முழம் போட்டுக் கொண்டு விமர்சித்து பேசுகின்றனர்.

    7 பேர் விடுதலைக்காக தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத அவர்கள் இதுபற்றி பேசுவதற்கு எதற்கும் தகுதி இல்லாதவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×