search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் தங்கமணி
    X
    அமைச்சர் தங்கமணி

    அரசின் வருவாயை பெருக்க மதுவிலை உயர்த்தப்பட்டுள்ளது- அமைச்சர் தங்கமணி

    அரசின் வருவாயை பெருக்க மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் ஒன்றியம் வசந்தபுரம் ஊராட்சி வீரியம் பாளையத்தில் ரூ189.59 லட்சத்தில் சாலையை விரிவாக்கம் செய்வதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பூரண மதுவிலக்கு அரசின் அடிப்படியான கொள்கை. தமிழகத்தில் 5152 மதுக்கடைகள் உள்ளது. இதில் 2000 கடைகளுக்கு மட்டுமே பார் செயல்படுகிறது. அரசின் வருவாயை பெருக்க மதுபான விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் 17,000 மெகா வாட் மின் தேவை இருக்கும். அப்போது தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மின் இழப்பு 21 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக தற்போது உள்ளது. அது 10 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை வைத்து செருப்பை கழற்றிய சம்பவம் தவறான நோக்கத்தில் நடந்தது அல்ல. அதற்கு மன்னிப்பு கேட்ட நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அதுபற்றி பேசி அரசியல் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×