search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிட்டாளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயார்நிலையில் இருந்தபோது எடுத்த படம்.
    X
    கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிட்டாளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தயார்நிலையில் இருந்தபோது எடுத்த படம்.

    சென்னை பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக வந்த சென்னை பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்தனர்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக நேற்று முன்தினம் சென்னை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தாம்பரம் சேலையூரை சேர்ந்த சிட்டாள்(வயது 40) என்ற பெண் வந்தார்.

    விமான நிலையத்தில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் பாதிப்பு எதுவும் இல்லை என தெரிந்தது. வீட்டுக்கு சென்ற அவருக்கு நேற்று காலை திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சீனா வழியாக வந்ததால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பாக இருக்கலாம் என சந்தேகித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு அவரை கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதுகுறித்து ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி கூறும்போது, “சிட்டாளுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த எந்த அறிகுறியும் இல்லை என தெரியவந்துள்ளது. அவருக்கு சாதாரண காய்ச்சல்தான். அவர் நலமாக இருக்கிறார். இருந்தபோதிலும் அவர் ஒருசில நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுவார்” என்றார்.
    Next Story
    ×