search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் பல்லவி பல்தேவ்
    X
    கலெக்டர் பல்லவி பல்தேவ்

    தேனியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    தேனியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தேனி:

    தேனி வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் சாலைப்பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் தேனி புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக கோட்ட மேலாளர் (தேனி) சரவணக்குமார், தேனி டி.எஸ்.பி., முத்துராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், மீரான் மற்றும் போலீஸ்துறைைய் சார்ந்தர்வர்கள், பள்ளி தேசிய மாணவர் படை, செஞ்சிலுவை சங்க மாணவர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளியை சார்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தில் சென்ற வர்கள் சாலை பாதுகாப்பு குறித்தும், வாகனங்கள் ஓட்டும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கோ‌ஷங்கள் செய்து கொண்டும், விழிப்புணர்வு தட்டிகளை கையில் ஏந்தி கொண்டும், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டு சென்றனர்.

    இந்த வார விழாவை முன்னிட்டு தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று இலவச மருத்துவ உடற் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை முகாமும், தேனி மேரிமாதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நாளை சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    அதுபோல 24-ந் தேதி உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் கல்லூரி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விதிமீறல்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. வருகின்ற 25-ந் தேதி ஆண்டிபட்டியில் சாலை பாதுகாப்பு குறித்து சீட்பெல்ட் அணிதல், தலைகவசம் அணிதல், வாகனம் இயக்கும் போது கைபேசி பயன்படுத்துவதை தவிர்த்தல் போன்றவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.

    இதேபோன்று 27-ந் தேதி அன்று தேனி மற்றும் கம்பம் பேருந்து நிலையலங்களில் வாகன விற்பனை முகவர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களை கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விபத்து முதலுதவி குறித்த தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, 108 பணியாளர்கள் ஆகியோர்களை கொண்டு செயல் விளக்க நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    Next Story
    ×