search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவண்ணாமலையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல்- ஒருவர் கைது

    திருவண்ணாமலையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா ஒரு குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது .

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக் குமார் தலைமையிலான போலீசார் திருவண்ணமலை அஜிஸ் காலனி முதல் தெருவில் உள்ள ஒரு குடோனில்அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    அப்போது டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர். போலீசாரின் இந்த சோதனையில் வீடு மற்றும் 2 சொகுசு கார்களில் அட்டைப்பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த குட்கா மற்றும் பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.

    இவைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். போலீசாரின் விசாரணையில் கருவாட்டுக் கார தெருவில் கடை நடத்தி வரும் நவ்ராம், அவரது தம்பி‌ ஜிதேந்திரகுமார் ஆகியோர்தான் குடோனில் பதுக்கி வைத்து குட்கா மற்றும் பான்மசாலாவை விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டில் இருந்த ஜிதேந்திரகுமாரை கைது செய்தனர்.

    சோதனை குறித்து தகவல் கிடைத்ததும் நவ்ராம் தலைமறைவாகிவிட்டார்.அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதேபோல் திருவண்ணா மலையை அடுத்த நல்லியம் பாளையம் கிராமத்தில் நடத்திய சோதனையில் அப்பகுதியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த தனியார் குடோனில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×