search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    உப்பிலியபுரம் பகுதியில் கோவில்-வீடுகளில் தொடர் கொள்ளை

    உப்பிலியபுரம் பகுதியில் கோவில் மற்றும் வீடுகளில் மர்ம நபர்கள் தொடர் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது.
    உப்பிலியபுரம்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே  உப்பிலியபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட் டது எரகுடி கிராமம். இங்கு தெற்குத்தெருவில்  பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

    கொள்ளையடிக்கப்பட்ட உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை கரிகாலி அருகே தூக்கி வீசிவிட்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர். 

    இதுபோல் கோட்டபாளையத்தில் உள்ள தெற்கு மாரியம்மன் கோவில் தெற்கு விஸ்வாள் சமுத்திரம் மாரி யம்மன் கோவிலிலும் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள உண்டியலையும் திருடி சென்றுவிட்டனர். 

    இதேபோல் நேற்று முன்தினம் சோபனபுரம் ரெட்டி குட்டையை சேர்ந்த ராஜம்மாள் (வயது 70) என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள், வெள்ளி குத்து விளக்கு 4 ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

    துறையூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்த ராஜம்மாள் தன்னுடைய வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகுதான் கொள்ளை நடந்திருப்பதை அறிந்தார். 

    இந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் மற்றும் வீட்டில் நடந்த துணிகர தொடர் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×