search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம நபர்கள் கைவரிசை"

    • செல்போனை பறித்து கொண்டு தப்பித்து ஓடினர்.
    • 16 வயது சிறுவனை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் கூத்தப்பாக்கம் வங்கி நகர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (வயது 75) மூதாட்டி. இன்று காலை கூத்தப்பாக்கம் முருகன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மூதாட்டி புஷ்பா பின்னால் 2 வாலிபர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த வாலிபர்கள் மூதாட்டியிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பித்து ஓடினர். இதனை எதிர்பாராத மூதாட்டி அதிர்ச்சியடைந்து திருடன் திருடன் என கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் ஆட்டோவில் ஏறி தப்பித்து ஓடினர்.

    மற்றொரு வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் செல்போன் பறித்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் தப்பி சென்ற வாலிபரும் அதே பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதன்பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதேபோன்று கடலூர் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாகனங்களில் செல்லக்கூடிய நபர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி செல்போன் பறிப்பு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதில் நேற்று 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வருவதால் நகை மற்றும் பணம் பறிக்கும் சம்பவத்தை விட செல்போன்களை பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதால் போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, புது நபர்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது. இதனால் போலீசார் இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக உள்ளது.

    • கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
    • வீட்டிற்கு வந்த வசந்தி, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழவந்தி, சேட்டுக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி வசந்தி அதே பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதில் இருந்த 8 பவுன் நகைகள், 5 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

    வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வசந்தி, கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களை கொண்டு கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்கள், கைரேகைகளை சேகரித்தனர்.

    வசந்தி தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போனதால் மிகவும் வேதனைக்கு ஆளானார். பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா? என தேடிப் பார்த்தனர்.
    • பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர்.

    திட்டக்குடி, அக்.28-

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி (45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள், பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று வீட்டில் நகை, பணம் ஏதும் உள்ளதா என தேடிப் பார்த்தனர். நகை ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்து ரூ.5 ஆயிரம் பணம் மட்டும் எடுத்துக் கொண்டு, அங்கு பிரிட்ஜ்யில் வைத்திருந்த கறி குழம்பு, சாப்பாடு போட்டு சாப்பிட்டுவிட்டு தட்டுகளை பின்புறம் உள்ள வயலில் எறிந்து விட்டு சென்றுள்ளனர். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் மனைவி விஜயலட்சுமி (27), கை குழந்தையுடன் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மேலூர் கிராமத்தில் இருக்கும் தனது அம்மா வீட்டுக்கு சென்றார். பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விஜயலட்சுமிக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே விரைந்து வந்த விஜயலட்சுமி வீடடின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டின் அரை கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்த 1¾ பவுன் தங்க நகை மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதேபோல் வீட்டிற்கு பின்புறம் இருந்த மற்றொரு வீட்டிலும் பீரோவை உடைத்துள்ளனர். அங்கு பொருட்கள் ஏதும் இல்லாத நிலையில் அப்படியே போட்டு விட்டு சென்றுள்ளனர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மருதத்தூர் கிராமத்தில் நேற்று இரவு 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்ற சம்பவம் அப்பாகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×