search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்பு
    X
    பொங்கல் பரிசு தொகுப்பு

    பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காதவர்கள் புகார் செய்யலாம்- கலெக்டர் மகேஸ்வரி அறிவிப்பு

    பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காதவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்களின் செல்போனில் புகார் தெரிவிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் 1,133 கூட்டுறவு ரே‌ஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 65 ஆயிரத்து 363 மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரூ.1,000 ரொக்கமும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தைப் பெறாமல், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 13-ந் தேதிக்குள் முழுமையாக வழங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பரிசு பொருள்கள் கிடைக்காதவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்களின் செல்போனில் புகார் தெரிவிக்கலாம். திருவள்ளூர்- 94450 00177, திருத்தணி-94450 00182, பள்ளிப்பட்டு-94450 00183, பொன்னேரி-94450 00178, கும்மிடிப்பூண்டி-94450 00179, ஊத்துக்கோட்டை- 80984 79640, பூந்தமல்லி- 94450 00181, ஆவடி- 98949 39884, ஆர்.கே.பேட்டை- 96296 41771 மற்றும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை 04427662400 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×