search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பரிசு"

    • டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு கைரேகை பதியவில்லை எனக் கூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை.
    • பொங்கல் பரிசு பெற்ற மூதாட்டி மாலைமலர் நாளிதழுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் வள்ளியம்மாள் (70). இவரது கணவர் தாமோதரன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகும் நிலையில் இவரது மகனும் மாரடைப்பில் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் அவருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டும் சுமார் 2 வருட காலமாக ரேசன் கடைகளில் எந்த விதமான பொருட்களும் வழங்கப்படவில்லை. வெள்ள நிவாரணம் முதல் பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் வரை இதுவரை தனக்கு வழங்கப்படவில்லை எனவும் ரேசன் கடைக்குச் சென்று கேட்கும் பொழுது கைரேகை சரிவர பதியவில்லை என கூறி அலட்சியப்படுத்தி அனுப்பி வருவதாகவும் இதனால் மனவேதனையில் இருப்பதாகவும் வள்ளியம்மாள் கண் கலங்கினார்.

    பொங்கல் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை மட்டும் வழங்கிவிட்டு கைரேகை பதியவில்லை எனக் கூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை.

    இது குறித்த செய்தி நேற்று மாலை மலரில் வெளிவந்தது. இதை பார்த்து உடனடியாக உணவு பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் அம்பத்தூர் மண்டல உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று காலை கள்ளிக்குப்பம் கங்கை நகரில் உள்ள நியாய விலை கடைக்கு விரைந்து வந்த அதிகாரிகள் மூதாட்டியை கடைக்கு அழைத்து வந்து பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி சேலை, மற்றும் ரூ.1000 ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கினர். மேலும் மழை நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் பெறுவதற்கு வழிவகை செய்வதாகவும் அதற்கு முதல் கட்டமாக அதற்குண்டான படிவத்தையும் பூர்த்தி செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணம் பெற்ற மூதாட்டி மாலைமலர் நாளிதழுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

    • பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் அப்பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து, ரூ.500 ஏற்கனவே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ரூ.250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் மொத்தம் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.

    • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
    • சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன்.

    சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும்! என கூறியுள்ளார்.

    • பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கனும் வழங்கப்பட்டது.
    • டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டன. ரொக்கப் பணம் வழங்கவில்லை.

    அந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்களில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த ஆண்டு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, கரும்புடன் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பரிசுக்கான ரொக்கத் தொகை அறிவிப்பை தமிழக அரசு கடந்த 5-ந் தேதி வெளியிட்டது. அதன்படி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறைப் பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்தப் பொருளும் பெறாதோர் ஆகியோரைத் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.

    ஆனால், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.

    இந்தக் கோரிக்கைகளை ஏற்று, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 71 ஆயிரத்து 113 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை டி.யு.சி.எஸ். ரேசன் கடைக்கு நேரில் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

    கடையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை அடங்கிய பொருட்களை ஒரு பையில் போட்டு தயாராக வைத்திருந்தனர். அந்த பையுடன் கவரில் 1000 ரூபாய் பணம் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றையும் சேர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலை வேலு எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. டோக்கன்களின் அடிப்படையில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தது போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்கள்.

    வருகிற சனிக்கிழமைக்குள் (13-ந்தேதி) அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அளிக்க கூட்டுறவு-உணவுத்துறை தீர்மானித்துள்ளது. அதாவது இன்று தொடங்கி 4 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ. 1000 வழங்கப்படுகிறது.
    • அரசுக்கு ரூ. 2 ஆயிரத்து 436 கோடி செலவினம்.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தால் அரசுக்கு ரூ. 2 ஆயிரத்து 436 கோடி செலவினம். அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என 2,19,71,113 குடும்ம்பத்தினர் பயனடைவர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரூ.1000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவையும் வழங்கப்படுகிறது.
    • பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கனும் வழங்கப்படு வருகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை கார்டு பொருள் இல்லா கார்டுகளை வைத்திருப்பவர்களை தவிர்த்து அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேசன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கனும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    • மகளிர் உரிமைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவதைப் போல, பொங்கல் பரிசுத் தொகையையும் செலுத்தலாம்.
    • கரும்பு கொள்முதலுக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாமே?

    மதுரை:

    பொங்கல் தொகுப்பில் வெல்லம் வழங்க வேண்டும், ரூ.1000 ரொக்கத்தை வங்கியில் வரவு வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொங்கல் பரிசுத் தொகையை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது?

    மகளிர் உரிமைத் தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவதைப் போல, பொங்கல் பரிசுத் தொகையையும் செலுத்தலாம். கரும்பு கொள்முதலுக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாமே?

    அடுத்தாண்டு சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டையை காண்பித்து டோக்கனை பெற்றுக்கொண்டனர்.
    • பொதுமக்கள் ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருள் இல்லாத அட்டைதாரர்கள் ஆகியோரை தவிர்த்து மற்ற ரேஷன்கார்டு தாரர்கள் அனைவருக்கும் பொங்கலுக்கு முன்பே ரூ.1000 ரொக்கத்துடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளது.

    ரேஷன்கார்டுகள் பொங்கல் தொகுப்பை வாங்குவதற்காக பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கி அதன்மூலமாக பொங்கல் தொகுப்பை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி தமிழகம் முழுவதும் இன்று வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. வீடு வீடாக இந்த டோக்கன் வழங்கப்பட்டது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வினியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

    பொதுமக்கள் தங்களது ரேஷன் அட்டையை காண்பித்து டோக்கனை பெற்றுக்கொண்டனர். டோக்கனில் கடையின் பெயர், டோக்கன் எண், எந்த தேதியில் பொருட்களை வாங்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் 3 நாட்கள் வருகிற 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன்பின்னர் வருகிற 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை டோக்கன் வரிசை மற்றும் நாள்படி பொதுமக்கள் ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த 3 நாட்களில் பொங்கல் தொகுப்பை வாங்காதவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான அடுத்த ஞாயிற்றுக்கிழமை (14-ந்தேதி) பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    எனவே பொதுமக்கள் கூட்டமாக ரேஷன் கடைகளில் கூட வேண்டாம் என்றும் தங்களது டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சென்று பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
    • டோக்கனில் நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை-எளிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை இந்த தொகுப்பில் இடம்பெற்றன. ரேசன் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் தொகுப்புடன் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பான பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரொக்கப்பணம் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகள் மூலம் பொங்கலுக்கு முன்னதாக ரூ.1000 ரொக்கமும், பொங்கல் தொகுப்பும் வழங்கிட அனைத்து மாவட்டங்களிலும் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    உணவு வழங்கல் பாதுகாப்பு துறையின் மூலம் இதற்காக கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2 கோடியே 20 லட்சம் பேர் இத்திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள்.

    பொங்கல் தொகுப்பு மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்த பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்காது. பொங்கல் பண்டிகை 15-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதால் 13-ந்தேதி (சனிக்கிழமைக்குள்) பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி-சேலையும் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனால் ரேசன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படக் கூடும் என்பதால் வழக்கம்போல டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு ரேசன் கடைகளுக்கும் உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த தேதியில், எந்த நேரத்தில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.

    ரேசன் கடை ஊழியர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (7-ந்தேதி) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. 3 நாட்களுக்குள் டோக்கன் வினியோகிக்கப்படும். ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் 1000 முதல் 1500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த நாளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்பதை டோக்கன் மூலம் உறுதி செய்யப்படும்.

    அதனால் தேவையில்லாமல் ரேசன் கடைகளுக்கு மக்கள் செல்ல தேவையில்லை. குறிப்பிட்ட நாளில் சென்று நெரிசல் இல்லாமல் கைவிரல் பதிவு செய்து பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் பெறலாம்.

    டோக்கன் வினியோகம் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் முடிக்கப்படும். அதனை தொடர்ந்து 10-ந்தேதி (புதன்கிழமை) முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

    அதனை தொடர்ந்து எல்லா இடங்களிலும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்படும். 4 நாட்களுக்குள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும் வகையில் உணவு வழங்கல் துறை விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் நாளில் ரேசன் கடைகளில் நீண்ட வரிசை எதுவும் இல்லாமல் மக்கள் எளிதாக பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தினமும் 300 குடும்ப அட்டைதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்படும்.

    சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சில பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. 1967, 1800425 5901 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பரிசு தொகுப்பு முறையாக வினியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படுகிறது. எவ்வித புகாருக்கும் இடமின்றி பொங்கல் தொகுப்பினை வழங்கிட வேண்டும் என ரேசன் கடை ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம்.
    • தமிழக அரசுக்கு ரூ.167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு.

    2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.

    அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

    சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

    பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் எனவும் அறிவித்துள்ளது.

    • பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்குவதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
    • ரேசன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும் ஏன் மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி. 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

    மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.

    மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10 ஆம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லை.
    • 9 ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரையை நேற்று தொடங்கினார்.

    அங்கிருந்து பழைய பஸ் நிறுத்தம் வரை நடந்து சென்று மக்களை சந்தித்தார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த யாத்திரையில் அப்பகுதி மக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்தும், நினைவு பரிசு, புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கியும், இளைஞர்கள் செல்பியும் எடுத்து கொண்டனர்.

    பின்னர் அண்ணாமலை பேசியதாவது:

    சேலத்தில் இருந்து ஓமலூர், மேட்டூர் அணை பகுதிக்கு ரெயில் வழி பாதையை இருவழி பாதையாக மாற்றக்கூடிய திட்டம் திருச்சியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. நம் ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லை, சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளை கடந்தும் ஏற்காடு பகுதியில் சில இடங்களில் சாலை இல்லாத கிராமங்கள் உள்ளன.

    சேர்வராயன் மலையில் தண்ணீர் வசதி இல்லை. தமிழகத்தில் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லை. நம்பர் ஒன் மாநிலம் என்று முதல்வர் தெரிவிக்கிறார். ஆனால் 8 லட்சத்து 34 ஆயிரத்து 544 கோடி ரூபாய் இன்றைய தமிழக கடன். கடன் வாங்குவதில் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி விட்டனர்.

    உங்கள் வங்கி கணக்குக்கு 8.5 கோடி ரூபாய் பிரதமர் அனுப்பி உள்ளார். யாருக்காவது தெரியுமா? விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வருகிறது. 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு சத்தமின்றி உங்கள் கையில் கிடைக்கிறது. பொன்முடி பையன் என்ற ஒரே தகுதியில் கவுதம சிகாமணி எம்.பி. ஆகியுள்ளார். அவருக்கு ஒரு தீர்ப்பு வந்து விட்டது, மற்றொரு தீர்ப்பு வந்தால் கள்ளக்குறிச்சிக்கு வேகமாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை வரும், இம்முறை கட்சியை பார்க்காமல் மோடியை பார்த்து ஓட்டு போடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ஆத்தூர் மற்றும் தம்மம்பட்டியில் நடந்த என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் அண்ணாமலை பேசியதாவது:-

    2024-ல் மீண்டும் மோடி ஆட்சி வருவது உறுதி, 5 ஆண்டுகள் உங்கள் தொகுதி தி.மு.க. எம்.பி. செய்தது என்ன, இலவசங்களை பெற்றது தான் சாதனை, பொங்கல் தொகுப்பு அறிவிக்க மாட்டார்கள், எதிர்கட்சிகள் கேட்ட பின்தான் தருவார்கள், ரூ.1000 வருவது உறுதி, ஒரு ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு வருகிறது. சத்தம் இல்லாமல் மோடி அரசு வழங்கி வருகிறோம். இந்தியாவில் மாசு அதிகமுள்ள நதி தான் வஷிஷ்ட நதி, இதை கூட தூய்மைப்படுத்த முடியாத நிலையில் தி.மு.க. அரசு உள்ளது.

    9 ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை செயல்பாடு மிக மோசமாக உள்ளது. பா.ஜ.கவினர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். நாம் ஆட்சிக்கு வந்ததும் அதனை திருத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாலை 6 மணியளவில் எடப்பாடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அண்ணாமலை பேசுகிறார்.

    ×