search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்பு
    X
    பொங்கல் பரிசு தொகுப்பு

    திருப்பூரில் 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்: கலெக்டர் தகவல்

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளமுள்ள கரும்புத்துண்டுடன் தலா 20 கிராம் திராட்சை, முந்திரி மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத் தொகையும் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை வழங்கவும், விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ந் தேதி அன்று வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், நடைமுறையிலுள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுமுறையின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். நெரிசல் ஏற்படும் வண்ணம் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் கூட வேண்டாம் என்றும் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    இப்பணி குறித்து புகார்கள் ஏதும் இருப்பின் அதனை தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை 0421-2971116 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
    Next Story
    ×