search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக-திமுக
    X
    அதிமுக-திமுக

    திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தேர்தல்: திமுக-75, அதிமுக- 57 இடங்களை கைப்பற்றியது

    திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தேர்தலில் திமுக -75, அதிமுக- 57 இடங்களை பிடித்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 19 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 8 இடங்களில் அ.தி.மு.க.வும், 2 இடங்களில் தி.மு.க.வும், தே.மு.தி.க. ஒரு இடத்திலும், பா.ஜ.க. ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 5 பேரும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    தாராபுரத்தில் 12 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 2 இடங்களில் அ.தி.மு.க.வும், 7 இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

    குடிமங்கலத்தில் 13 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 7 இடங்களில் அ.தி.மு.க.வும், 6 இடங்களில் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளனர்.

    காங்கயத்தில் 11 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 5 இடங்களில் அ.தி.மு.க.வும், 3 இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் ஒரு இடத்தையும், சுயேட்சைகள் 2 இடத்தையும் பிடித்துள்ளது.

    குண்டடத்தில் 15 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 5 இடங்களில் அ.தி.மு.க.வும், 5 இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் 2 இடத்தையும், தே.மு.தி.க. ஒரு இடத்தையும், பா.ஜ.க. ஒரு இடத்தையும, சுயேட்சை ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

    மடத்துக்குளத்தில் 9 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், 6 இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் ஒரு இடத்தையும், தே.மு.தி.க. ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

    மூலனூரில் 10 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், 8 இடங்களில் தி.மு.க.வும், சுயேட்சை ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

    பல்லடத்தில் 13 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 5 இடங்களில் அ.தி.மு.க.வும், 5 இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் 2 இடத்தையும், சுயேட்சை ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

    பொங்கலூரில் 13 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 2 இடங்களில் அ.தி.மு.க.வும், 8 இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் ஒரு இடத்தையும், தே.மு.தி.க. ஒரு இடத்தையும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

    திருப்பூரில் 8 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 4 இடங்களில் அ.தி.மு.க.வும், 2 இடங்களில் தி.மு.க.வும், காங்கிரஸ் ஒரு இடத்தையும், சுயேட்சை ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

    உடுமலையில் 26 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 7 இடங்களில் அ.தி.மு.க.வும், 15 இடங்களில் தி.மு.க.வும், பா.ஜ.க. ஒரு இடத்தையும், சுயேட்சை 2 இடத்தையும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

    ஊத்துக்குளியில் 12 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 5 இடங்களில் அ.தி.மு.க.வும், 4 இடங்களில் தி.மு.க.வும், சுயேட்சை 3 இடத்தையும் பிடித்துள்ளது.

    வெள்ளகோவிலில் 9 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 5 இடங்களில் அ.தி.மு.க.வும், 4 இடங்களில் தி.மு.க.வும் பிடித்துள்ளது.

    மொத்தம் 170 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களில் 57 இடங்களை அ.தி.மு.க.வும், 75 இடங்களை தி.மு.க.வும், காங்கிரஸ் 9 இடத்தையும், தே.மு.தி.க. 4 இடத்தையும், பா.ஜ.க. 3 இடத்தையும், சுயேட்சைகள் 18 இடத்தையும், ம.தி.மு.க. ஒரு இடத்தையும், இந்திய கம்யூனிஸ்டு 2 இடத்தையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.

    Next Story
    ×