என் மலர்
நீங்கள் தேடியது "வாக்கு எண்ணிக்கை"
- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.
- காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.
இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.
12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.
மொத்த கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரசின் UDF, 445 இடங்களிலும், ஆளும் இடது முன்னணியான LDF, 370 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மேலும், நகராட்சிகளிலும் UDF 55 இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது. 87 நகராட்சிகளில் UDF - 55 இடங்களிலும் LDF 28 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கோழிக்கோட்டில் இடது முன்னணியான LDF முன்னிலை வகிக்கிறது.
அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 6 இடங்களில் வெற்றி பெற்றால், மேயர் பதவியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கேரள உள்ளாட்சி தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில் ஆளும் இடது முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
- அனைத்து மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
- முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.
முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
முதல் கட்டத்தில் 71 சதவீதம், இரண்டாம் கட்டத்தில் 76 சதவீதம் என மொத்தத்தில் 73.69 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலை விட 2 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியிருந்தது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணக்கை மையம் முன்பு அரசியல் கட்சியினர் திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.
வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களில் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.
காலை 8.30 மணியளவில் முன்னணி நிலவரம் வெளியாக தொடங்கியது. காலை 9.45 மணி நிலவரப்படி மாநிலத்தில் உள்ள 6 மாநகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 3 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 2 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும், தேசய ஜனநாயக முன்னணி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்தன.
இதேபோல் மாநிலத்தில் உள்ள 86 நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 46 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 30 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.
941 கிராம பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி 340 இடங்களிலும், ஐக்கிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 32 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மாநிலத்தில் உள்ள 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி 7 இடங்களிலும், இடது ஜனநாயக முன்னணி 5 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.
மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மாறி மாறி முன்னிலையில் இருந்துவந்தன.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 24 தொகுதிகளைக் கொண்ட சீமாஞ்சல் பகுதியில் 10 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
- தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.
- காங்கிரஸ் கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறு 46 மையங்களில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் என்.டி.ஏ. கூட்டணி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார்.
+3
- மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.
வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 'விவிபாட்' எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டது.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று இன்று தெரிந்துவிடும்.
- பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
- 243 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.
பாட்னா:
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது.
மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு 11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. இது, முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை விட அதிகம் ஆகும்.
அதிக அளவாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாவட்டமான கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76.23 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்தன.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதனை தொடர்ந்து மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. 243 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.
பீகாரில் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து இன்று பகல் 12 மணிக்குள் தெரிய வரும்.
மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. கிட்டத்தட்ட 38 மாவட்டங்களில் 57 எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மின்தளத்தில் (EVM) தரவு சரிபார்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் results.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும். மாலைக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இந்திய தேர்தல் ஆணையம், பீகார் மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துள்ளது.
- தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும்.
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு 11-ந்தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. இது, முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை விட அதிகம் ஆகும். அதிக அளவாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாவட்டமான கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76.23 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதனை தொடர்ந்து மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில், ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை.
பீகாரில் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து நாளை பகல் 12 மணிக்குள் தெரிய வரும்.
இந்திய தேர்தல் ஆணையம், பீகார் மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துள்ளது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 38 மாவட்டங்களில் 57 எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மின்தளத்தில் (EVM) தரவு சரிபார்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் results.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும். மாலைக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகி உள்ளன
- மொத்தம் 42 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 4-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளன.
கடந்த தேர்தலில் டெல்லி மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. பாஜக இரண்டாவது இடமும், காங்கிரசுக்கு குறைந்த அளவிலும் இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைக்காக, மொத்தம் 42 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 68 கண்காணிப்பாளர்கள் இந்த பணியை கண்காணித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை சரி செய்ய 136 பொறியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பார்ப்பதற்கு வசதியாக வாக்கு எண்ணும் மையங்களில் பெரிய அளவிலான எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது.
- 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை 68 கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 122 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 113 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
- வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
- மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.
கோவை,
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் யூனியன் சின்னத் தடாகம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019 அன்று நடைபெற்றது.
இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும். அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திரவடிவு உள்பட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2.1.2020- அன்று எண்ணப்பட்டது.
அன்று இரவு 10 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. முதலில் தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சுதா 2,553 வாக்குகளும், அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்திரவடிவு 2,549 வாக்குகளும் பெற்றதாகவும், தெரி விக்கப்பட்டது.இதையடுத்து சுதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அறி விக்கப்பட்டது.
ஆனால் வாக்குகள் மறுபடியும் எண்ணப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் சவுந்திர வடிவு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா, தேர்தல் அதிகாரியிடம் ஆட்சேபனை மனு அளித்தார். மேலும் அவர் சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர்தேர்தலில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிடக்கோரி கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார். அதன்படி இன்று குருடம்பாளையம் அருகே அருணா நகர் சமுதாய நலக்கூடத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதற்காக கலெக்டர் அலுவலக கருவூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 12 ஓட்டுப்பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் குருடம்பாளையம் எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 12 மணிக்கு வாக்குப்பெட்டிகளை திறந்து அதிகாரிகள் வாக்குகளை எண்ணினர்.
வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் முடிவுகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்றும், அதன்பின்னரே வெற்றி பெற்றவர் விவரம் தெரிவிக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
- இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
இதேபோன்று மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஒரு எம்.பி. மற்றும் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 3 மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.
- நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இதேபோன்று மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஒரு எம்.பி. மற்றும் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 3 மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.






