என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள உள்ளாட்சி தேர்தல்: அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிமுகம் - ஆளும் கூட்டணிக்கு பின்னடைவு  - அப்போ பாஜக?
    X

    கேரள உள்ளாட்சி தேர்தல்: அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றிமுகம் - ஆளும் கூட்டணிக்கு பின்னடைவு - அப்போ பாஜக?

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.
    • காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    மொத்த கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரசின் UDF, 445 இடங்களிலும், ஆளும் இடது முன்னணியான LDF, 370 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மேலும், நகராட்சிகளிலும் UDF 55 இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது. 87 நகராட்சிகளில் UDF - 55 இடங்களிலும் LDF 28 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கோழிக்கோட்டில் இடது முன்னணியான LDF முன்னிலை வகிக்கிறது.

    அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 6 இடங்களில் வெற்றி பெற்றால், மேயர் பதவியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    கேரள உள்ளாட்சி தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில் ஆளும் இடது முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

    Next Story
    ×