search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர்நீதிமன்ற மதுரை கிளை
    X
    உயர்நீதிமன்ற மதுரை கிளை

    வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவை ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவை ஒப்படைக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை வீடியோ எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், குறுகிய காலமே உள்ளதால் வாக்கு எண்ணிக்கையை தனித்தனியாக வீடியோ பதிவு சாத்தியம் இல்லை என தெரிவித்தது.

    இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவு பிரதியை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படுகின்றன. 
    Next Story
    ×