search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மழை
    X
    சென்னையில் மழை

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமமையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. 

    இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கத்திப்பாரா, விமான நிலையம், அனகாபுத்தூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. 

    இதேபோல், தமிழகத்தில் உள்ள தஞ்சை, திருச்சி, கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
    Next Story
    ×