search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தந்தையை அடித்த கொன்ற மகன் - சாப்பாடு தான் காரணம்

    நெற்குன்றம் அருகே குடிபோதையில் இருந்த மகன் வயதான தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போரூர்:

    நெற்குன்றம் புவனேஸ்வரி நகர் லட்சுமணன் தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 80) இவரது மகன் பாலாஜி கட்டிட மேஸ்திரி.

    பாலாஜிக்கு குடிப்பழக்கம் கொண்டவர் மேலும் சரியாக வேலைக்கு செல் லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த பாலாஜி தந்தை முத்துவிடம் ஓட்டலில் சாப்பிட பணம் கேட்டார்.

    ஆனால் முத்து பணம் கொடுக்க மறுத்து விட்டார் ஆத்திரமடைந்த பாலாஜி தந்தை முத்துவை சரமாரியாக அடித்து உதைத்தார் இதில் தலை, கால், கையில், பலத்த காயம் அடைந்த முத்து மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிகிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் சப்- இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி பாலாஜியை கைது செய்தனர். குடிபோதையில் வயதான தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×