search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    ரஜினிகாந்த் கனவு என்று கூறியது நிஜமாகத்தான் இருக்கிறது- செங்கோட்டையன் பேட்டி

    தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என ரஜினிகாந்த் கூறியது நினைவாகத்தான் இருக்கிறது என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட் டியத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒருங்கிணைந்து குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது, விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கைகள், தொழில் துறையில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் நிதிகளை பெற்று பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் என எல்லா துறைகளிலும் இரவு, பகல் பாராமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்று இரண்டு ஆண்டிற்கு முன் எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் கூறியது கனவு என்பது அல்ல, அது நினைவாகத்தான் இருந்து கொண்டு இருக்கிறது.

    ரஜினி

    எதிர்க்கட்சி தலைவர் பல முறை இந்த ஆட்சி விரைவில் போய்விடும் என கூறினார். ஆனால் சட்ட மன்றத்தில் 122 பேராக இருந்த நாங்கள் தற்போது 124 பேராக இருக்கிறோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் உள்ளங்களில் முத லமைச்சர் நிறைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

    நீட் தேர்வில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆனால் தி.மு.க. போல ஆட்சிக்கு வராமலே நாங்கள் வந்தால் செய்வோம் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

    30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற பரிசீலனை உள்ளது. ஒரு வார காலத்திற்குள் அது குறித்து அறிவிக்கப்படும்.

    நிதி ஆயோக் தர குறியீட்டில் இந்த கல்வி ஆண்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு தான் பள்ளி இடை நிற்றலில் குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது.

    5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொதுத்தேர்வு நடைபெறும். இது மாணவர்களின் கல்வி திறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட தேவையில்லை. மாணவர்கள் இடைநிற்றல் என்கிற நிலைக்கு தமிழ்நாடு வழி வகுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×