என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது? - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
Byமாலை மலர்8 Nov 2019 1:58 PM GMT (Updated: 8 Nov 2019 1:58 PM GMT)
தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைப்பது அ.தி.மு.க. மட்டுமே என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறாமல் போராட்டங்களை தூண்டிக்கொண்டுள்ளர் ஸ்டாலின்.
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஆட்சிக்கு வருவது அ.தி.மு.க. மட்டும்தான். சிலர் அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அண்ணா கண்ட கனவை நனவாக்கவே அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார், எம்.ஜி.ஆரைப் போன்று யாரும் திரையுலகில் இருந்து வர முடியாது. வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்.
பலமான கூட்டணியை அ.தி.மு.க. அமைத்துள்ளது. அதிமுகவின் கூட்டணி பலம்பொருந்தியது; யாரும் அதனிடம் நெருங்க முடியாது
தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது. உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு இடைத்தேர்தல் வெற்றி முன்னோட்டமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story
×