search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் திறப்பு - எடப்பாடி பழனிசாமி உத்தரவு

    பாசனத்துக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து 30, 31-ந்தேதி வரை 154 நாட்களுக்கு 13725.92 மில்லியன் கன அடி தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதன் மூலம் தாமிரபரணி ஆற்றின் கீழ்வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங் கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய்,

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசன பரப்புகள் பருவ சாகுபடிக்கு பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×