search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியாது- ஜி.கே.வாசன்

    தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியாது என்று திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    த.மா.கா. மாவட்ட தலைவர்கள்- பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இயக்கத்தை வளர்க்கும் நோக்கில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா. பலமான கட்சியாக உருவெடுக்க கூட்டத்தை நடத்துகிறோம். வருகிற 26-ந்தேதி த.மா.கா. இளைஞரணி கூட்டம் ஈரோட்டில் நடைபெற உள்ளது.

    எந்த ஒரு மொழியையும் மக்களின் விருப்பம் இல்லாமல் யார் மீது திணிக்கவும் முடியாது, கட்டாயப்படுத்தவும் முடியாது. இந்தியை தமிழகத்தில் திணிக்க முடியாது. கட்டாயப்படுத்த முடியாது. தமிழக மக்கள் அதனை ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். ஏற்கனவே விவசாயிகள் பலவித துயரத்திற்கு ஆளாகி வரும் நிலையில் விவசாயக்கடன் வாங்கியுள்ளனர். அந்த கடன்களை திரும்பப்பெற மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்சி மாவட்டத்தில் உத்தமர்சீலி, கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை வாழை பயிர்கள் கருகி இருந்தன. தற்போது காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் வாழை பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வாழை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.

    காவேரி ஆற்றின் குறுக்கே 100 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவேரி- வைகை -குண்டாறு இணைக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த எல்லா வித முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    டெல்டா மாவட்டத்தில் 25 லட்சம் சம்பா நாற்று விடும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த பணி நல்ல முறையில் நடைபெற விவசாயிகளுக்கு உரம், பயிர்கடன் , விதைநெல், விவசாய கடன் போன்றவற்றை தங்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பேனர் , கட் அவுட் போன்றவற்றை தடை செய்ய வேண்டும். அதே சமயத்தில் டிஜிட்டல் பேனர் தொழில் நடத்தும் பல தொழிலாளர்களின் வாழ்க்கையை எண்ணிப் பார்த்து அரசு மற்றும் போலீசார் அனுமதி வழங்கும் இடங்களிலும், பொதுமக்கள் எந்தவித பாதிப்பு இல்லாத வகையில் பேனர்களை வைக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    பெட்ரோல்

    உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். எண்ணெய் விலை உயர்வால் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஜினி கட்சி தொடங்கினால் பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×